உலகம்

வியட்நாமில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 114 ஆக உயர்வு

ANI

வியட்நாமில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளில் சிக்கிப் பலியானோர்களின் எண்ணிக்கை 114ஆக உயர்ந்துள்ளது.

வியட்நாம் நாட்டில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகள் கடுமையான வெள்ள பாதிப்பைச் சந்தித்துள்ளன. வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய வியட்நாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 114ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 21 பேர் காணவில்லை என உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கிட்டத்தட்ட 59,300 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் 46,800 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் 6,91,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளன.

மழை வெள்ளத்தால் சாலைகள் சேதமானதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT