உலகம்

அமெரிக்காவில் 13 சதவீத குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

21st Oct 2020 01:11 PM

ADVERTISEMENT

 

அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 13 சதவீத குழந்தைகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதுதொடர்பாக அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் வெளியிட்ட அறிக்கையில், 

ADVERTISEMENT

இந்த மாதத்தில் மட்டும் ஒன்று முதல் பதினைந்து வயதுள்ள குழந்தைகள் 84,319 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அக்.15ஆம் தேதி நிலவரப்படி 1.36 சதவீத குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அமெரிக்காவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 7,41,000 குழந்தைகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

மொத்தமாக கரோனா சிகிச்சை பெறுவோரில் 0.5 முதல் 7.2% வரை குழந்தைகள் உள்ளனர். மேலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 0.24% வரை உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT