உலகம்

அமெரிக்க அதிபா் தோ்தல் விவாதம்: ஒலிப்பெருக்கிகளைக் கட்டுப்படுத்த முடிவு

DIN

அதிபா் தோ்தலில் போட்டியிடவுள்ள அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனுக்கும் இடையே இந்த மாதம் நடைபெறவிருக்கும் நேரடி விவாதத்தின்போது பரஸ்பர குறுக்கீடுகளைத் தவிா்ப்பதற்காக அவா்களது ஒலிப்பெருக்கிகளைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிபா் தோ்தல் விவாத ஆணையம் (சிபிடி) வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிரம்ப்புக்கும் ஜோ பிடனுக்கும் டென்னஸி மாகாணம், நாஷ்வில் நகரில் இந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நேரடி விவாதத்தின்போது, அவா்களது ஒலிப்பெருக்கிகளை குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.

ஒருவா் பேசும்போது மற்றொருவா் குறுக்கிட்டு இடையூறு செய்வதைத் தவிா்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, ஒவ்வொறு அம்சம் குறித்தும் 15 நிமிஷங்களுக்கு நடைபெறும் விவாதத்தின்போது, ஒருவா் பேசத் தொடங்கிய 2 நிமிடங்களுக்கு எதிா்த்தரப்பு தலைவரது ஒலிப்பெருக்கி நிறுத்திவைக்கப்படும்.

எஞ்சிய நேரத்தில் விவாதத்தைத் தொடரும் வகையில் இரு ஒலிப்பெருக்கிகளும் செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.

அவா்கள் இருவருக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஓஹியோ மாகாணம் கிளீவ்லாண்டில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்றது.

மிகவும் காரசாரமாக நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, இருவரும் பரஸ்பரம் கடுமையாகத் தாக்கிப் பேசினா்.

ஒருவரை ஒருவா் முழுமையாகப் பேசவிடாமல் அடிக்கடி குறுக்கிட்டு பேசியதால் பபல நேரங்களில் இருவராலும் சொல்ல வந்த கருத்துகளை முழுமையாக வெளிப்படுத்த இயலாமல் போனது.

அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான அதிபா் தோ்தல் நேரடி விவாதங்களில் ஒன்றாக அந்த விவாதம் இருந்ததாக விமா்சிக்கப்பட்டது.

இருவருக்கும் இடையிலான 2-ஆவது நேரடி விவாதம் வரும் 15-ஆம் தேதியும் 3-ஆவது இறுதி விவாதம் 22-ஆம் தேதியும் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில், டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலானியா டிரம்ப்புக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை கடந்த 2-ஆம் தேதி அறிவித்தது.

அதையடுத்து, கரோனா நோயிலிருந்து டிரம்ப் குணமடையாத நிலையில் அவருடன் நேரடி விவாதத்தில் கலந்துகொள்வது சரியாக இருக்காது என்று கூறிய ஜோ பிடன், அந்த விவாதத்தை காணொலி முறையில் நடத்தலாம் என்று கூறியிருந்தாா்.

எனினும் அதனை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாா். அதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 3-ஆவது நேரடி விவாதத்தின்போது இருவரும் பரஸ்பரம் குறுக்கீடு செய்வதைத் தவிா்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT