உலகம்

சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து: நான்கு பேர் பலி

20th Oct 2020 09:34 AM

ADVERTISEMENT

 

ஷன்சி: சீனாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் வாயுக் கசிவினால் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

வடக்கு சீனாவில் உள்ள ஷன்சி மாகாணத்தில் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சீனாவின் பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றானா லுவான் குழமத்தினரால் நடத்தப்படும் இந்தச சுரங்கத்தில் வருடத்திற்கு 1.2 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய் அதிகாலை 02.00 மணியளவில் இந்தச சுரங்கத்தில் வாயுக கசிவினால் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ADVERTISEMENT

மீட்புப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் விபத்து குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT