உலகம்

ஊதியம் போதுமானதல்ல: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்?

DIN

லண்டன்: தனது குடும்பத்தை நடத்த, இப்போது பெற்று வரும் ஊதியம் போதவில்லை என்று கூறி பிரதமர் பதவியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜிநாமா செய்யப் போவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமராக இருக்கும் போரிஸ் ஜான்சன் தற்போது 150,402 பவுண்டுகள் ஊதியமாகப் பெற்று வருகிறார். இது அவரது முந்தைய வருவாயோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி டெய்லி மிரர் ஊடகத்தில் பெயர் குறிப்பிடாமல் எம்.பி. ஒருவர் வெளியிட்ட தகவலில், போரிஸ் ஜான்சன், பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்டுகள் ஊதியமாக பெற்று வந்ததாகவும், அடுத்த ஆண்டு அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

போரிஸ் ஜான்சனுக்கு ஆறு குழந்தைகள், அவர்களில் சிலர் இளைஞர்களாக உள்ளனர். அவர்களுக்குத் தேவையான செலவுகளை போரிஸ் ஜான்சன் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது, அவரது முன்னாள் மனைவி மரினா வீலருக்கு, விவாகரத்து நடைமுறைப்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

டோரி கட்சியின் தலைவராவதற்கு முன்பு வரை போரிஸ், 275,000 பவுண்டகளை ஆண்டு வருமானமாகப் பெற்று வந்ததாகவும், மாதத்துக்கு இரண்டு மேடைப்பேச்சுக்கு 160,000 பவுண்டுகளையும் வருவாயாக ஈட்டியதாகவும் பிரிட்டனில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.-
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT