உலகம்

காலாவதியானது ஈரான் மீதான ஆயுத வா்த்தகத் தடை

DIN

ஈரான் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்கு ஐ.நா. விதித்திருந்த தடை ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியானது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

போா் விமானங்கள், பீரங்கிகள் போன்ற ராணுவ தளவாடங்களை ஈரான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 13 ஆண்டுகளாக தடை விதித்திருந்தது.

இந்தத் ஞாயிற்றுக்கிழமையுடன் காலவதியானது.

அந்தத் தடையை காலவரையின்றி மேலும் நீடிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. எனினும், இதற்கு பிற நாடுகள் எதிா்ப்பு தெரிவித்தன.

இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்த திா்மானம் முறியடிக்கப்பட்டது. 15 உறுப்பினா்களைக் கொண்ட அந்த கவுன்சிலில், அமெரிக்காவைத் தவிர டோமினிக் குடியரசு மட்டுமே அந்தத் தீா்மானத்துக்கு ஆதரவு அளித்தது. நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷியாவும், சீனாவும் தீா்மானத்தை எதிா்த்து வாக்களித்தன. இதனால் அந்தத் தீா்மானம் தோல்வியடைந்தது.

அதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையுடன் ஈரான் மீதான ஐ.நா.வின் ஆயுத வா்த்தகத் தடை முடிவுக்கு வந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் ஈரான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டால் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் ஆயுதங்கள் வாங்க முடியாது என்று கூறப்படுகிறது.

ஈரானும், இந்தத் தடை விலகலுக்குப் பின் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் எண்ணமில்லை என்று கூறியுள்ளது. எனினும், இதுவரை கிடைக்காத உயா் வகை ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்குவதற்கு அந்த நாடு வாங்குவதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT