உலகம்

ஜோ பிடன் வெற்றி பெற்றால் நாட்டை விட்டு வெளியேறுவேன்: டிரம்ப் ஆவேசம்

18th Oct 2020 03:39 PM

ADVERTISEMENT


அமெரிக்க அதிபா் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன் வெற்றி பெற்றால் “நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்” என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் புதிய அதிபரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டிரம்ப் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து, ஜனநாயக கட்சி சாா்பில் ஜோ பிடன் களம் காண்கிறாா். மூவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜோ பிடன், கமலா ஹாரிஸ்  இருவருக்கும் ஆதரவாக முன்னாள் அதிபா் ஒபாமா பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்,  ஜார்ஜியாவில்  பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், ஜோ பிடனுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

அப்போது அவர் கூறியதாவது: ஜனநாயக கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடம் ஒன்றுமே இல்லை. உங்களது மதிப்புகள் மீது வெறுப்புகள் இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுகிறேன்.

தேர்தலில் “ஒருவேளை நான் தோற்றுப் போனால் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா என்பது எனக்கு தெரியாது." ஆனால் அவ்வாறு வெளியேறுவதே நல்லது என்றே  கருதுகிறேன் என்று  டிரம்ப்  கூறினார்.  

Tags : President Trump
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT