உலகம்

போலந்து நாட்டில் ஒரேநாளில் 9,622 பேருக்கு கரோனா

17th Oct 2020 05:27 PM

ADVERTISEMENT

போலந்து நாட்டில் ஒரேநாளில் 9,622 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் 3.95 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் அண்மை தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் மீண்டும் ஊரடங்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் ஜரோப்பிய நாடான போலந்தில் ஒரேநாளில் 9,622 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,67,230ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு மேலும் 132 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிகை 3,524ஆக உயர்ந்துள்ளது. 

போலந்து நாட்டில் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT