உலகம்

அதிபர் தேர்தல்: திங்கள் முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமலா ஹாரிஸ்

17th Oct 2020 11:23 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி வரும் திங்கள் கிழமை முதல் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தமது பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்பும், துணை அதிபராக மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர். 

இவர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

அதிபர் தேர்தலையொட்டி இருதரப்பு அதிபர் வேட்பாளர்களிடையேயும் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதிபர் டிரப்பை விட 8.9 சதவிகிதம் முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வரும் திங்கள் கிழமை முதல் தமது பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.

அதிபர் வேட்பாளர் குழுவில் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரசாரத்தை ஒத்திவைத்திருந்த அவர், கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இதில், கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்ததைத் தொடர்ந்து வரும் திங்கள் கிழமை முதல் கமலா ஹாரிஸ் தமது பிரசாரத்தைத் தொடக்க உள்ளார்.  

கமலா ஹாரிஸுக்கு அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : US elections
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT