உலகம்

சீனாவுடன் தொடர்புடைய 3,000 போலி யூடியூப் சேனல்களை நீக்குகிறது கூகுள்

17th Oct 2020 11:32 AM

ADVERTISEMENT

 


சான் பிரான்சிஸ்கோ: பொய்யான தகவல்களை பரப்புவதாகக் கூறி சீனாவுடன் தொடர்புடைய 3000 போலி யூடியூப் சேனல்களை நீக்குகிறது கூகுள்.

உலகம் முழுவதும் சீனாவுடன் தொடர்புடைய செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் மீது பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் யூடியூப் வலைத்தளத்தில் பொய்யான தகவல்களை பரப்புவதாகக் கூறி சீனாவுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 3000 போலி யூடியூப் சேனல்களை நீக்குகிறது கூகுள்.

ADVERTISEMENT

தேவையற்ற செய்திகள் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் போலி செய்திகளைக் கொண்டிருந்த காரணத்தால் அவை நீக்கப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"இந்த போலி யூடியூப் வலைத்தளத்தில் காணப்படும் பெரும்பாலான விடியோக்களை 10 க்கும் குறைவானர்களே பார்வையிட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானவை போலியான கணக்குகளே" என்று கூகுள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இது யூடியூப்பில் உண்மையான பயனாளர்களை சென்றடைவதை காணமுடியவில்லை" என்று கூகுள் அச்சுறுத்தல் பகுப்பாய்வு குழு கூறியுள்ளது. 

மேலும், "ஒட்டுமொத்தமாக, இந்தாண்டு நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி சமூக வலைத்தளங்கள் போலி செய்திகளைத் தடுப்பதிலும்,  அச்சுறுத்தல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளோம்" என்று கூகுள் அச்சுறுத்தல் பகுப்பாய்வு குழு தெரிவித்துள்ளது. 
 

Tags : Google removes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT