உலகம்

உலக அளவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது

17th Oct 2020 09:45 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்து 86 ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 214  நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்து 86 ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது , அதே நேரத்தில் 2,96,58,564 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 87,47,736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 71,469 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 11,09,130 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 65,24,595 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
    
தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 82,88,278     பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,23,644 பேர் உயிரிழந்துள்ளனர். 

நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது  இடங்களில் உள்ளது. இந்தியாவில் 74,32,680 பேரும், பிரேசிலில் 52,01,570 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் ரஷ்யா (1,361,317), அர்ஜென்டினா (965,609), கொலம்பியா (945,354), ஸ்பெயின் (936,560), பிரான்ஸ் (876,342), பெரு (859,740), மெக்சிகோ (841,661) ), தென்னாப்பிரிக்கா (700,203), இங்கிலாந்து (692,112), ஈரான் (522,387), சிலி (488,190), ஈராக் (420,303), இத்தாலி (391,611) மற்றும் பங்களாதேஷ் (386,086) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு பட்டியலில் பிரேசில் 1,53,229 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும்,  இந்தியா 1,13,032     உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

பலி: மெக்ஸிகோ (85,704), இங்கிலாந்து (43,519), இத்தாலி (36,427), ஸ்பெயின் (33,775), பெரு (33,577), பிரான்ஸ் (33,325), ஈரான் (29,870), கொலம்பியா (28,616), அர்ஜென்டினா (25,723), ரஷ்யா (3,580), தென்னாப்பிரிக்கா (18,370), சிலி (13,529), ஈக்வடார் (12,357), இந்தோனேசியா (12,347), பெல்ஜியம் (10,327) மற்றும் ஈராக் (10,142) பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT