உலகம்

கருப்பையை வெட்டி, குழந்தையைக் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை

17th Oct 2020 12:32 PM

ADVERTISEMENT

வாஷிங்டன்: கர்பிணியைக் கொன்று, அவரது கருப்பையை வெட்டி, வயிற்றுக்குள் இருந்த குழந்தையைக் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் பெண் லிஸா மோன்ட்கோமெரியாவார். இவருக்கு வரும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி இண்டியானாவில் உள்ள ஃபெடரல் கரக்ஷனல் வளாகத்தில் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரண தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டிருந்து, கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் இந்தத் தண்டனை வழங்கப்படத் தொடங்கியதில் இருந்து,  மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது குற்றவாளியாக லிஸா உள்ளார்.

2004-ஆம் ஆண்டு ஸ்கிட்மோர் அருகே மிஸெளரி நகரில் வசித்து வந்த 23 வயது பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற கர்பிணியை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது வயிற்றைக் கிழித்து குழந்தையைக் கடத்திச் சென்ற வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

எலியை வேட்டையாடும் பூனையை தத்தெடுப்பதற்காக ஸ்டின்னெட் வீட்டுக்கு வந்த மோன்ட்கோமெரி, கயிறால், எட்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த ஸ்டின்னெட்டின் கழுத்தை நெரித்துள்ளார்.  ஆனால் மயக்க நிலைக்குச் சென்ற ஸ்டின்னெட், கொலைகாரியிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள மிகவும் போராடியுள்ளார். அப்போது, வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்த கொலைகாரி, கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருப்பையில் இருந்த குழந்தையை எடுத்துள்ளார்.

குழந்தை இல்லாத மோன்ட்கோமெரி, ஸ்டின்னெட்டின் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்து, தன்னுடையதாகக் காட்டிக் கொள்ள முயன்றதாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், இதை அவர் சுயநினைவில்லாத நிலையில்தான் செய்ததாக அவரது வழக்குரைஞர் வாதிட்டார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் குற்றவாளி என்று அறிவித்து மரண தண்டனை விதித்துள்ளது.
 

Tags : Court america hot news pregnancy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT