உலகம்

பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு

17th Oct 2020 01:40 PM

ADVERTISEMENT

 

பிலிப்பின்ஸின் ஆக்ஸிடெண்டல் மிண்டோரோ மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

லூக் நகரிலிருந்து வடகிழக்கில் 21 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டதாக பிலிப்பின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் 12 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை வெளியாகவில்லை. சுனாமி ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் இல்லை என்று பிவோல்க்ஸ் தலைவர் ரெனாடோ சோலிடம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT