உலகம்

ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கரோனா

17th Oct 2020 07:43 PM

ADVERTISEMENT

ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் கரோனா தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார். 

எனினும், அலெக்சாண்டருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் லக்சம்பர்க்கில் திங்களன்று நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றதன்மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். 

தொற்று உறுதியானதையடுத்து அலெக்சாண்டர் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். 8.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஆஸ்திரியாவில் இன்று மட்டும் 2,300 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுவரை கரோனாவுக்கு 882 பேர் பலியாகியுள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT