உலகம்

ஜெர்மனியில் அதிகரிக்கும் கரோனா: இன்று 5,132 பேருக்குத் தொற்று

14th Oct 2020 11:56 AM

ADVERTISEMENT

 

ஜெர்மனியில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,132 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினசரி பாதிப்பு தொடர்பாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ)புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது, 

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 5,132 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,34,585 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் நோய்த் தொற்று பாதித்து 43 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 9,677 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT