உலகம்

கார் வெடிகுண்டுத் தாக்குதல்: ஆப்கானில் நான்கு ராணுவ வீரர்கள் பலி

7th Oct 2020 01:27 PM

ADVERTISEMENT

 

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் படையினர் நடத்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இதுதொடர்பாக தெற்கு ஹெல்ம்லாந்து மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான ஓமர் ஜ்வக் புதனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தெற்கு ஹெல்ம்லாந்து மாகாணத்தின் கிரேஷ்க் மாவட்டம் யக்சல் பகுதியில் ராணுவ சோதனைச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இங்கு செவ்வாய் இரவு 11.30 மணியளவில் தலிபான் படையினர் கார் வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர் . இதில் நான்கு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் அதிகாரப்பூர்வமாக பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT