உலகம்

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,859 பேருக்கு கரோனா

3rd Oct 2020 03:48 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,859 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 9,859 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. அவர்களில் 2,680 பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாஸ்கோவில் மட்டும் அதிகபட்சமாக 2,884 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை மொத்தம் 12,04,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 174 பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 21,251 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனவிலிருந்து 5,563 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,75,859 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT