உலகம்

பிரிட்டனில் 3 மாதத்தில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வாய்ப்பு

3rd Oct 2020 06:29 PM

ADVERTISEMENT

பிரிட்டனில் கரோனா தடுப்பூசி இன்னும் 3 மாதத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். இது தவிர இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் பிரிட்டனில் இன்னும் 3 மாத்திற்குள் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பூசி ஆய்வுத் தரவுகளை மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாடு 3 மாதத்திற்குள்ளும், பெரியவர்களுக்கான தடுப்பூசி பயன்பாடு 6 மாதத்திற்குள்ளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் இதுவரை 10 லட்சத்து 34 ஆயிரத்து 95 பேர் கரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT