உலகம்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 75,49,323 ஆக உயர்வு

3rd Oct 2020 09:34 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7,549,323 ஆக அதிகரித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு அடுத்து பாதிக்கப்பட்டுள்ள உலகத் தலைவா்களின் பட்டியலில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் இணைந்துள்ளாா்.

ஏற்கெனவே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபா்கள், பிரதமா்கள், முக்கிய அமைச்சா்கள் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தகுந்த சிகிச்சைக்குப் பிறகு அவா்களில் பெரும்பாலானவா்கள் குணமடைந்துள்ளனா்.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 75,49,323 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,13,524 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 47,76,824 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 51,403 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 864 பேர் பலியாகியுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT