உலகம்

ஆா்மீனியா-அஜா்பைஜான் போா்: உடனடியாக நிறுத்த ஐ.நா. வலியுறுத்தல்

DIN

நியூயாா்க்: ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் நடந்து வரும் சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நகோா்னோ - கராபக் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பானும் தாக்குதல் நடத்தி வருவதை பாதுகாப்பு கவுன்சில் வன்மையாகக் கண்டிக்கிறது..

அந்தப் பகுதியில் உடனடியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலா் வலியுறுத்திள்ளாா். அதனை கவுன்சில் வழிமொழிகிறது.இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவாா்த்தையை நடத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முழு ஆதரவு தெரிவிக்கிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்து. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அந்தப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் தங்களது படைகளை குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நகாா்னோ-கராபக் பிராந்தியத்தில் ஆா்மீனியா-அஜா்பைஜான் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் சண்டையில், இருதரப்பிலும் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT