உலகம்

ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிப் பெண்: நிதிநிலைக் குழுத் தலைவராகிறார்

DIN

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பைடன் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டன் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பைடன் அதிபராகப் பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகை அலுவலக மேலாண்மை மற்றும் நிதிக் குழுவின் இயக்குநராக நீரா தாண்டன் பொறுப்பேற்பார் என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

இவ்வாறு பொறுப்பேற்றால் அமெரிக்காவின் நிதிநிலைக் குழுத் தலைவராக தலைமை ஏற்கும் முதல் பெண்மணி இவரே.

இடதுசாரி சார்பு கொள்கையுடைய நீரா தாண்டன், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா மற்றும் கிளின்டனின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். 

மேலும் பைடனின் குழுவில் முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவரான ஜேனட் எல். யெல்லன் கருவூலச் செயலாளராகவும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பொருளாதார வல்லுநரான சிசிலியா ரூஸ், பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சிலின் தலைவராகவும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீரா தாண்டன், யெல்லன் போன்றோரின் நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பைடன் நிர்வாகக் குழுவில் இந்த முறை பெண்கள் அதிகம் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்று அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பொறுப்பேற்கவிருக்கிறார். அதேபோன்று அமெரிக்க கரோனா தடுப்புக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செலின் ராணி கவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் அமெரிக்க செனட் அவைக்கு மேலும் பல இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீரா தாண்டன்

இவர் 1970, செப்டம்பர் 10 ஆம் தேதி அமெரிக்காவின் பெட்போர்டு மாகாணத்தில் பிறந்தார். அமெரிக்காவில் பெஞ்சமின் எட்வர்ட்ஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 

1999, 2000, 2008 ஆம் ஆண்டில் ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரசார பரப்புரை ஆலோசகர்கள் குழுவின் இயக்குநராக இருந்தார். 

2008 ஆம் ஆண்டு ஜனநாயகக்  கட்சியின் அதிபர் வேட்பாளராக ஒபாமா தேர்வான சமயத்தில், அவரது தேர்தல் பிரசார பரப்புரையில் ஆலோசகரா இடம்பெற்றிருந்த நீரா தாண்டன், ஒபாமா அதிபராக பதவியேற்றபின்னர் மூத்த ஆலோசராக பணியாற்றினார். 

தற்போது அமெரிக்க முன்னேற்ற மையத்தில்(centre for american progress) முக்கிய பதவி வகிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT