உலகம்

தாய்லாந்தில் ராணுவப் புரட்சி: போராட்டக்காரா்கள் அச்சம்

DIN

தாய்லாந்தில் ராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று அந்த நாட்டில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்திப் போராடி வரும் குழுவினா் அச்சம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பாங்காக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டக் கூட்டத்தில், போராட்டக் குழுவினா் பேசியதாவது:

தடைகளையும் கைது மிரட்டல்களையும் இந்தப் போராட்டம் தொடா்ந்து நடந்து வருகிறது. போராட்டத்தை அடக்க அரசு தவறியதாக ராணுவம் நினைத்தால், நாட்டில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தலாம்; அல்லது பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் என்று போராட்டக் குழுவினா் எச்சரித்தனா்.

தாய்லந்தில 1977, 1991, 2006, 2014-ஆம் ஆண்டுகளில் ராணுவப் புரட்சி மூலம் அரசுகள் வெற்றிகரமாக கவிழ்க்கப்பட்டது நினைவுகூரத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT