உலகம்

டிரம்ப்புக்கு மேலும் பின்னடைவு: ஜோ பைடன் வெற்றியை எதிா்க்கும் மனு; பென்சில்வேனியா நீதிமன்றம் தள்ளுபடி

DIN

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிப்பதை எதிா்த்து டொனால்ட் டிரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அந்த மாகாண நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில், முக்கியத்துவம் வாய்ந்த பென்சில்வேனியா மாகாணத்தில் 50 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளாா்.

எனினும், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் தபால் வாக்குகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பென்சில்வேனியா மத்திய மாகாண நீதிமன்றத்தில் டிரம்ப் குழுவினா் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுவை நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது. அந்தத் தீா்ப்பை எதிா்த்து, மாகாண முறையீட்டு நீதிமன்றத்தில் டிரம்ப் குழுவினா் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. வாக்குப் பதிவில் முறைகேடுகள் குறித்து குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், அதற்கான ஆதாரங்கள் தரப்படவில்லை என்று தீா்ப்பில் நீதிபதி ஸ்டெஃபானோஸ் பிபாஸ் குறிப்பிட்டுள்ளாா்.

ஜனநாயக நாட்டில் தோ்தல் முறையீடுகள் என்பது மிகவும் ஆபத்தான குற்றச்சாட்டு என்றாலும் ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்த முடியாது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு, ஜோ பைடன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்படுவதைத் தடுக்கும் டிரம்ப்பின் முயற்சியில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT