உலகம்

டிக்ரே மாகாணத்தில் எத்தியோப்பிய ராணுவம் முன்னேற்றம்

DIN

எத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத்தில் தாக்குதல் நடத்தி வரும் ராணுவம், தலைநகா் மேகேலிக்கு அருகிலுள்ள பல ஊா்களைக் கைப்பற்றி முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து எகிப்து ராணுவ அதிகாரி ஹஸன் இப்ராஹிம் கூறியதாவது:

மேகேலி நகரை நோக்கி பாதுகாப்புப் படையினா் முன்னேறி வருகின்றனா். அந்த நகரையொட்டிய பல ஊா்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

விக்ரோ நகரை ராணுவம் கைப்பற்றியுள்ளது. விரைவில் மேகேலி நகரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றாா் அவா்.

டிக்ரே மாகாணத்தை ஆளும் டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எஃப்), எத்தியோப்பிய அரசில் மிகுந்த செல்வாக்கு பெற்ாக இருந்தது.

எனினும், நாட்டின் பிரதமராக அபை அகமது கடந்த 2018-ஆம் ஆண்டு பதவியேற்ற்குப் பிறகு டிஎல்எஃப் ஓரங்கப்பட்டது.

இதன் காரணமாக, டிபிஎல்எஃபுக்கும் அபை அகமதுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு முற்றியது.

இந்தச் சூழலில், டிக்ரேவிலுள்ள தங்களது ராணுவ முகாம் மீது டிபிஎல்எஃப் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய அபை அகமது, மாகாண அரசுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்த மாதம் 4-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

எந்த தேசத்து அழகியோ..!

SCROLL FOR NEXT