உலகம்

அமெரிக்காவில் 1.34 கோடியை தாண்டிய கரோனா பாதிப்பு: 2,64,842 பேர் பலி

28th Nov 2020 01:29 PM

ADVERTISEMENT

 

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 1.34 கோடியைத் தாண்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் தொடர்ந்து 25-வது நாளாக தினசரி பாதிப்பு 1 லட்சத்தைத் தாண்டி பதிவாகி வருகின்றது. இதனால், நாளுக்கு நாள் அமெரிக்க மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

சனிக்கிழமை நிலவரப்படி, அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,86,367-ஆக உள்ளது. இதுவரை 2,64,842 போ் அந்த நோய்ப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

79,45,582 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்; 52,37,646 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 24,464 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT