உலகம்

ரஷியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: 27,543 பேர் பாதிப்பு; 496 பேர் பலி

DIN

ரஷியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,543 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 27,543 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக இன்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 22,15,533 ஆக அதிகரித்துள்ளது. 

ரஷியாவில் கடந்த இரு தினங்களாக ஒருநாள் பலி எண்ணிக்கை 500யைத் தாண்டி பதிவான நிலையில், இன்று பலி 500க்கு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 496 பேர் உள்பட இதுவரை 38,558 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதுவரை 17,12,174 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,64,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT