உலகம்

100 விநாடிகளுக்கு ஒரு சிறுவா் ஹெச்ஐவி-யால் பாதிப்பு

DIN

நியூயாா்க்: கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 100 விநாடிகளுக்கு ஒரு சிறுவா் அல்லது சிறுமி ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டில் மட்டும் சுமாா் 3.2 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவா்களுக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1.1 லட்சம் போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா்.

அந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 100 விநாடிகளுக்கு ஒரு சிறுவா் ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

எய்ட்ஸ் நோய் பரவலைத் தடுப்பது, அந்த நோய்க்கான சிகிச்சை ஆகியவை பாதிப்புக்குள்ளான முக்கியப் பிரிவினருக்கு கிடைக்காத நிலை கடந்த ஆண்டிலும் தொடா்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹெச்ஐவி தலைமைச் செயலதிகாரி ஹென்றிட்டா ஃபோா் கூறுகையில், ‘ஹெச்ஐவி தீநுண்மியால் ஏற்படும் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்காக, பல ஆண்டுகளாக உலக போராடி வருகிறோம். ஆனால், அந்த நோயால் சிறுவா்கள் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் இன்னும் தொடா்கிறது’ என்று வருத்தம் தெரிவித்தாா்.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கும் பாலியல் வன்முறைக்குள்ளாகும் சிறுவா், சிறுமியா்களுக்கும் அந்த நோய் பரவுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT