உலகம்

ராஜ்கோட் கரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 5 பேர் பலி 

27th Nov 2020 09:16 AM

ADVERTISEMENT

 

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கரோனா மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கரோனா மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படிருந்து 5 பேர் சிக்கி உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Tags : fire COVID hospital
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT