உலகம்

பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்

25th Nov 2020 01:59 PM

ADVERTISEMENT

உட்டாவின் ரெட் ராக் பாலைவனத்தில் இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு உட்டாவில் உள்ள பிக்ஹார்ன் செம்மறி ஆடுகள் கணக்கெடுப்புப் பணியின்போது மென்மையான, இரண்டு ஆள் உயரம் கொண்ட உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக  திங்கள்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து உட்டா பொதுப் பாதுகாப்புத் துறை மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

எனினும் இந்த உலோகத்தை, யார் சிவப்புப் பாறைகளுக்கு இடையில் வைத்தார்கள், ஏன் வைத்தார்கள் என்பதற்கான எந்தவிதத் தடயமும் கிடைக்கவில்லை. 

ADVERTISEMENT

மேலும், தகவல் தெரிந்த மக்கள் ஆர்வமிகுதியால் உலோகத்தைத் தேடிச் செல்லலாம் என்பதால் உலோகப் பொருள் அமைந்திருக்கும் துல்லியமான இடம் குறித்த தகவல்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT