உலகம்

நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து முடிவு

25th Nov 2020 02:33 PM

ADVERTISEMENT

பெண்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து அரசு முடிவுசெய்துள்ளது.

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.எஸ்.பி) மோனிகா லெனான் பெண்களுக்காக சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட சுகாதாரப் பொருள்களை இலவசமாக வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்பட்ட இந்த மசோதா 121 வாக்குகளுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக ஸ்காட்லாந்து மாறியுள்ளது.

மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஸ்காட்லாந்து முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுகாதாரப் பொருள்கள் இலவசமாகக் கிடைக்கும்.

ADVERTISEMENT

Tags : Scotland
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT