ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ரஷியாவில் கரோனா இரண்டாம் அலை காரணமாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 24,326 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு 2,1,38,828 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 491 பேர் உள்பட இதுவரை 37,031 பேர் உயிரிழந்துள்ளனர்
ADVERTISEMENT
அதேநேரத்தில் தற்போதுவரை 16,34,671 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 467,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.