உலகம்

மண் மாதிரிகளைச் சேகரிக்க நிலவுக்கு விண்கலம்: சீனா ஏவியது

24th Nov 2020 05:48 PM

ADVERTISEMENT

நிலவிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து வருவதற்காக விண்கலம் ஒன்றை சீனா விண்ணில் ஏவியுள்ளது.

சந்திரன் மற்றும் சூரிய குடும்பத்தைப் பற்றி மனிதகுலம் மேலும் அறிந்துகொள்வதில்  இந்தப் பயணம் மிகவும் உதவியாக இருக்கும்.

சாங் 5 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலன் நிலவில் இறங்கி அதன் மேற்பரப்பில் 2 மீட்டர் ஆழத்துக்குத் துளையிட்டு சுமார் 2 கிலோ அளவுக்கு பாறைகள் மற்றும் பிற மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும்.  14  நாட்கள் வரை நிலவிலிருந்து செயல்படும் வகையில் இதன் லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் வெற்றி சீனாவின் விண்வெளித் திட்டத்தில்  ஓரு பெரிய முன்னேற்றமாக அமையும். 

ADVERTISEMENT

தவிர இதேபோல் செவ்வாய்க் கோளிலிருந்தும் மண் மாதிரிகளைச் சேகரிக்க முடியும், நிலவிற்கு மனிதர்களையும் அனுப்பி சோதனை நடத்த முடியும் என்று கருதப்படுகிறது.  

Tags : china moon mission
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT