உலகம்

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 13.93 லட்சத்தைத் தாண்டியது

23rd Nov 2020 11:46 AM

ADVERTISEMENT

 

உலகளவில் கரோனா தொற்று பாதித்து பலியானோர் எண்ணிக்கை 13.93 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

நவ.23-ம் தேதி நிலவரப்பபடி, 5.89 கோடி பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 4,07,67,451 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உலக முழுவதும் இதுவரை 13,93,678 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதித்தவர்களில் 16,82,4,883 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,03,068 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ADVERTISEMENT

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,25,88,661  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,87,3,425 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 23,113 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 2,62,696 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 9,14,0312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,33,773 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT