உலகம்

லெபனானில் மக்கள் போராட்டம்

23rd Nov 2020 01:04 PM

ADVERTISEMENT

லெபனானில் சுதந்திர தினத்திலும் அரசுக்கு எதிராக மக்கள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

கரோனா காரணமாகப் பொது முடக்கம் அமலிலிருந்தபோதும், ஏராளமானோர், பெய்ரூத் நகர வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

நாட்டின்  அரசியல் தலைமையை நிராகரிக்கும் இவர்கள், லெபனானின் பொருளாதார, நிதிச் சிக்கல்களுக்கு அரசியல் தலைவர்களைக் குற்றம் சாட்டினர்.

இன்னமும் உண்மையான விடுதலை நாட்டு மக்களுக்குக் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக சுதந்திர தினத்தையொட்டிய அனைத்துவித நிகழ்ச்சிகளையும் அரசு ரத்து செய்திருந்தது.

 

Tags : Lebanon
ADVERTISEMENT
ADVERTISEMENT