உலகம்

ரஷியாவில் புதிதாக 24,581 பேருக்கு கரோனா தொற்று உறுதி

22nd Nov 2020 04:27 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்த நாட்டில் 24,581பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு 20,89,329 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 401 பேர் உள்பட இதுவரை 36,179 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 15,95,443 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 457,707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 6,575 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டு சுகாதாரத் துறை இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : russia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT