உலகம்

டிச.2-க்குப் பிறகு பொதுமுடக்கம் நீட்டிப்பு இல்லை: பிரிட்டன் அரசு முடிவு

22nd Nov 2020 11:02 AM

ADVERTISEMENT

பிரிட்டனில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. 

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று பிரிட்டன். 

இங்கு கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவிய வைரஸ் தொற்று, ஜூன் மாதத்தில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார். 

இதையடுத்து இரண்டாம் 2 ஆம் அலை பரவத் தொடங்கியதால் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

ADVERTISEMENT

தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து வருகிற டிசம்பர் 2 ஆம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக்கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அதேநேரத்தில் மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. மேலும் பிரிட்டனில் அடுத்த மாதம் முதல் கரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : england coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT