உலகம்

ஆப்கனில் பயங்கரவாதத் தாக்குதல்: 3 பேர் பலி

21st Nov 2020 04:58 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினரால் தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் காபூலில் சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முன்னதாக, பிப்ரவரி மாதம் அமெரிக்காவுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிலையில் 16 ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் தலிபான்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை செப்டம்பர் 12 அன்று கட்டாரில் பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னான இரண்டு மாத காலத்தில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Afghanisthan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT