உலகம்

உலக சுகாதார நிறுவனத்தில் மீண்டும் இணையும் அமெரிக்கா

20th Nov 2020 06:56 PM

ADVERTISEMENT

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில் மீண்டும் அதில் இணைய உள்ளதாக அமெரிக்க அதிபர் (தேர்வு) ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

கரோனா தொற்று பரவல் விவகாரத்தில் முன்கூட்டியே அமெரிக்காவை உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கவில்லை என்றும் சீன அரசாங்கத்திற்கு சாதகமாக அந்த அமைப்பு செயல்படுவதாகவும் கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார்.

மேலும் அந்த அமைப்பிற்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியையும் நிறுத்த உத்தரவிட்டார். இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் உலக சுகாதார நிறுவனத்தில் அமெரிக்காவில் மீண்டும் இணையும் என வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

அமெரிக்காவின் டெலாவேரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “இது சீனாவை தண்டிப்பதைப் பற்றியது இல்லை. இது விதிகளின் படி சீனா நடந்து கொள்வதை உறுதி செய்வதாகும்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Joe Biden
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT