உலகம்

பாகிஸ்தானில் ஒரேநாளில் அதிக பாதிப்பு: புதிதாக 2,738 பேருக்கு தொற்று

20th Nov 2020 05:00 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் ஒரேநாளில் அதிக அளவாக 2,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில், கரோனா தொற்று மீண்டும் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானிலும் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது.

இன்று மட்டும் புதிதாக 2,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரேநாளில் பதிவான அதிக பாதிப்பாகும். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,27,542ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 7,561ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 32,005 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 1,517 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 3,27,542 பேர் மீண்டுள்ளனர். 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT