உலகளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.72 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 20-ம் தேதி நிலவரப்பபடி 5 கோடியே 72 லட்சத்து 39 ஆயிரத்து 070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,97,34,003 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
உலக முழுவதும் இதுவரை 13,65,688 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,61,39,379 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,01,724 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,20,70,712 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,58,333 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.