உலகம்

கலிபோர்னியாவில் நாளை(நவ.21) முதல் முழு பொதுமுடக்கம் அமல்

20th Nov 2020 04:19 PM

ADVERTISEMENT

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் மாகாணத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக நவம்பர் 21ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது.

உலகம் முழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக நவம்பர் முதல் வாரத்தில் கிட்டத்தட்ட 50% அளவு தொற்று பாதிப்பு அதிகரித்ததாக அரசு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கலிபோர்னியா மாகாணத்தில் நவம்பர் 21ஆம் தேதி முதல் முழுபொதுமுடக்கம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு 10 மணி முதல் டிசம்பர் 21 அதிகாலை 5 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும். முன்னதாக ஓஹியோ, நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்களிலும் சமீபத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : california
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT