உலகம்

அமெரிக்காவில் 10 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு

17th Nov 2020 11:36 AM

ADVERTISEMENT

 

கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவில் இதுவரை சுமார் 10,39,464 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கரோனா தொற்றுக்கு புதிதாக 1,12,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இது மிக அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் குழந்தைகள் நல மையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளின் கூட்டமைப்பு இணைந்து வெளியிட்ட புள்ளிவிவரத்தில், 

ADVERTISEMENT

கடந்த நவம்பர் 12-ம் தேதி வரை மொத்தம் 10,39,464 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இது மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு விகிதம் 11.5 ஆக உள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,11,97,791 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,47,142 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT