உலகம்

‘கரோனாவின் தீவிரம் குறையவில்லை’: ஜெர்மனி அதிபர்

17th Nov 2020 05:05 PM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றாலும் அதன் தீவிரம் குறையவில்லை என ஜெர்மனி நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பின் தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு சாத்தியமிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை ஜெர்மனி நாட்டில் உள்ள மாகாணங்களின் தலைவர்களுடன் அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் நாட்டில் பொதுமுடக்க நடவடிக்கைகளை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பெர்லின் உள்ளிட்ட நகரங்களில் பொதுமுடக்க தளர்வால் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தெரிவித்த மெர்கல் தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவது பொருளாதாரத்திற்கும் சிறந்த தீர்வாக அமையும் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

“நோய்த் தொற்று எண்ணிக்கை பரவலாகக் குறைந்தாலும் அதன் தீவிரம் இன்னும் குறையவில்லை” என மெர்கல் எச்சரித்தார்.

கரோனா பரவலைக் கணக்கில் கொண்டு கடந்த நவம்பர் 2ஆம் தேதி முதல் ஒருமாத கால பொதுமுடக்கம் ஜெர்மனியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 653 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Germany
ADVERTISEMENT
ADVERTISEMENT