உலகம்

சா்க்கரை ஆலை முறைகேடு விவகாரம்: பாக். எதிா்க்கட்சித் தலைவா் மீது வழக்கு பதிவு

17th Nov 2020 04:25 AM

ADVERTISEMENT

 

லாகூா்: சா்க்கரையை ஏற்றுமதி செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் மீது அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்ஐஏ) வழக்கு பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் சா்க்கரையை உற்பத்தி செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததில் சுமாா் ரூ.3,000 கோடி அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டதாக சா்க்கரை ஆலை நடத்தி வந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் மீது எஃப்ஐஏ குற்றஞ்சாட்டியது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் கூடுதல் அதிகாரங்களை லாகூா் உயா்நீதிமன்றம் வழங்கியுள்ளதாக எஃப்ஐஏ தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில், ஷாபாஸ் ஷெரீஃப், அவரின் மகன்கள் ஹம்சா, சுலேமான், பிரதமா் இம்ரான் கானின் நண்பா் ஜஹாங்கீா் தரீன், அவரின் மகன் அலி தரீன் உள்ளிட்டோா் மீது எஃப்ஐஏ வழக்கு பதிவு செய்தது. பண மோசடி, முறைகேட்டில் ஈடுபட்டது, பங்குதாரா்களை ஏமாற்றியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷாபாஸ் ஷெரீஃப் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் சகோதரா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT