உலகம்

கில்ஜித் பல்டிஸ்தான் தேர்தலில் பாக். பிரதமர் இம்ரான் கட்சி வெற்றி

17th Nov 2020 06:09 AM

ADVERTISEMENT


இஸ்லாமாபாத்/புது தில்லி: இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கிடையே லடாக்கின் ஒரு பகுதியான கில்ஜித் பல்டிஸ்தானில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது லடாக் யூனியன் பிரதேச எல்லைக்குள் உள்ளது. அங்குள்ள கில்ஜித் பல்டிஸ்தான் சட்டப் பேரவைக்கு இந்தியாவின் கடுமையான எதிர்ப்பை மீறி பாகிஸ்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்தியது.  மொத்தம் 23 இடங்களுக்குக் கடும் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது. 
அதில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. அதில் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியதாகவும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 7 பேர் வெற்றி பெற்றதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுயேச்சைகளின் ஆதரவுடன் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT