உலகம்

லாஸ் ஏஞ்சலீஸ் அருகே விபத்துக்குள்ளான சிறு விமானம்

13th Nov 2020 03:02 PM

ADVERTISEMENT

கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகர் அருகே சிறு விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பற்றி எரிந்தது. 

கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகர், சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கிலுள்ள வைட்மேன் என்ற சிறிய விமானத் தளத்தில், ஓற்றை ஓடுதளத்தில் விமானம் ஒன்று தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் தீப்பற்றி எரிந்து சுக்குநூறாக நொறுங்கியது. விபத்தில் இப்பகுதியில் நின்ற கார்களும், அருகிலுள்ள ஒரு வீட்டின் முன்பகுதி புல்வெளியும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். 

முதற்கட்ட தகவல்களின்படி, அடையாளம் காணப்படாத சிறிய ரக விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து நிர்வாக செய்தித் தொடர்பாளர் அயன் கிரிகோர் தெரிவித்தார்.

Tags : US
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT