உலகம்

கரோனா பரிசோதனையின் நம்பகத் தன்மையைக் கேள்வி எழுப்பிய எலான் மஸ்க்

13th Nov 2020 05:31 PM

ADVERTISEMENT

தனக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பின் முடிவு முன்னுக்குப்பின் முரணாக வந்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் எலான் மஸ்க் கரோனா பரிசோதனையின் நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் அவர், “தனக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் இரண்டு முறை தொற்று உறுதி என்றும், இரண்டு முறை தொற்று இல்லை என்றும் வந்துள்ளது.” எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

தனக்கு சளி பாதிப்பு மட்டும் இருப்பதாக தெரிவித்துள்ள எலான் மஸ்க் தற்போது பிசிஆர் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Tags : elon musk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT