உலகம்

இந்தோனேசியாவில் புதிதாக 5,444 பேருக்கு கரோனா

13th Nov 2020 05:33 PM

ADVERTISEMENT

இந்தோனேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,444 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  மொத்த பாதிப்பு 4,57,735-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,444 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,57,735-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிற்கு புதிதாக 104 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 15,037-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,010 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,85,094-ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் 34 மாகாணங்களிலும் கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மத்திய ஜாவாவில் 1,362 பேரும், ஜகர்தாவில் 1,033 பேரும், கிழக்கு ஜாவாவில் 801 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT