உலகம்

ஜெர்மனியில் ஒரே நாளில் 23,542 பேருக்கு கரோனா

13th Nov 2020 06:05 PM

ADVERTISEMENT

ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,542 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,51,095-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் ஜெர்மனியில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,542 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,51,095-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 218 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,200-ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

ஜெர்மனியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு மாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான ராபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் லோதர் வெய்லர் தெரிவித்ததாவது, ''கரோனா பரவல் அடுத்தடுத்த வாரங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரோனா பரவல் மேலும் மோசமடையும் என்பதால் அதற்கு தயாராக இருக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT