உலகம்

அல்கொய்தா அமைப்பின் ராணுவத் தலைவர் பலி: பிரான்ஸ் அறிவிப்பு

13th Nov 2020 04:30 PM

ADVERTISEMENT

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் ராணுவத் தலைவர் மாலியில் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள சாஹேல் பிராந்தியத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு நாடுகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு காரணமாக இருந்ததாகக் கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அல்கொய்தாவின் ராணுவ தலைவரான பாக் ஹக் மெளசா மாலியில் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் இது மிகப்பெரிய வெற்றி என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

சஹேல் பிராந்தியத்தில்  புலனாய்வு அமைப்புகள், தரைப்படைகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மெளசா கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : France
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT